வாழ்வின் ரகசியம்
சிரியுங்கள் -- அது இதயத்தின் இசை! சிந்தியுங்கள் -- அது இளமையின் ரகசியம்! படியுங்கள் -- அது அறிவின் ஊற்று ! நட்பு பாராட்டுங்கள் -- அது மகிழ்ச்சியின் வழி! தியானத்தை உணருங்கள் -- அது தெளிவின் வழி ! உழைத்துப் பாருங்கள் -- அது வெற்றியின் வழி !
|
|
|
வாழ்க்கையில் வருவது இரண்டு
வருவதும் போவதும் இரண்டு :: இன்பம், துன்பம் வந்தால் போகாதது இரண்டு :: புகழ், பழி போனால் வராதது இரண்டு :: மானம், உயிர் தானாக வருவது இரண்டு :: இளமை, மூப்பு நம்முடன் வருவது இரண்டு :: பாவம், புண்ணியம் அடக்க முடியாதது இரண்டு :: ஆசை, துக்கம் தவிர்க்க முடியாதது இரண்டு :: பசி, தாகம் அழிவை தருவது இரண்டு :: பொறாமை, கோபம் நம்மால் பிரிக்க் முடியாதது இரண்டு :: பந்தம், பாசம் எல்லாருக்கும் சமமானது இரண்டு :: பிறப்பு, இறப்பு
|
உயர்வுக்கு வழி
வணங்கவேண்டிய தெய்வம் -- தாய், தந்தை. மிக மிக நல்ல நாள் -- இன்று மிகப்பெரிய தேவை -- நம்பிக்கை, நேரம். மிகப் பெரிய வெகுமதி -- மன்னிப்பு. செய்யக் கூடாதது -- நம்பிக்கை, துரோகம் மிகவும் சுலபமானது -- குற்றம் சொல்வது மிகவும் வேண்டியது -- பணிவும், பண்பும் மிகப்பெரிய நோய் -- பேராசை உயர்வுக்கு வழி -- உழைப்பு செய்யக்கூடியது -- உதவி கீழ்த்தரமான விசயம் -- பொறாமை திரும்பவராதது -- வாழ்ந்த வாழ்க்கை மறக்ககூடாதது -- நன்றி.
|
|
|
வெற்றியின் ரகசியம்
அன்பு காட்டு -- ஆனால் அடிமையாகி விடாதே இரக்கம் காட்டு -- ஆனால் ஏமாந்து விடாதே தர்மம் செய் -- ஆனால் ஆண்டியாகிவிடாதே சுறுசுறுப்பாய் இரு -- ஆனால் பதட்டப்படாதே பணிவாய் இரு -- ஆனால் கோழையாய் இராதே கண்டிப்பாய் இரு -- ஆனால் கோபப்படாதே சிக்கனமாய் இரு -- ஆனால் கஞ்சனாய் இராதே பொருளை தேடு -- ஆனால் பேராசைப்படாதே உழைப்பை நம்பு -- ஆனால் கடவுளை மறந்துவிடாதே
|